பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 199145 (2005 YY128) என்று பெயரிடப்பட்டுள...
பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
199145 (2005 YY128) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் சுமார் ஒரு கி.மீ. அளவு அகலம் கொண்டது என்றும், 1,870 முதல் 4,265 அடிகள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக 82 அடிகளுக்கும் குறைவான சிறிய விண்கற்கள் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
இவை வளிமண்டலத்திற்குள் நுழையும் போதே எரிந்து சிதைந்துவிடும். ஆனால் தற்போது பூமியை நெருங்கி வரும் விண்கல், நமது பூமிக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக கூறமுடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
இது அடுத்த வாரம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மோதலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தனர்.
இந்த நிலையில் 199145 (2005 YY128) விண்கல் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியின் சுற்றுவட்டப்பாதையை பெப்ரவரி 15 மற்றும்16 ஆகிய திகதிகளுக்குள் கடந்து செல்லும் என்றும், இதனை தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.