எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல தொழிற்சங்கங்களின் பிரதிகளு...
எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பல தொழிற்சங்கங்களின் பிரதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பெட்ரோலியம், மின்சாரம், துறைமுகங்கள், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தத்திற்கு எதிராக பல தொழிற்சங்கங்களால் இம்மாத ஆரம்பத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.