எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சியிலிருந்து வேறு கட்சிகளுக்கு தாவி தேர்தலில் போட்டியிடும் இளம் உறுப்பினர்களுக்கு எதிராக நட...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சியிலிருந்து வேறு கட்சிகளுக்கு தாவி தேர்தலில் போட்டியிடும் இளம் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராஜா தெரிவித்தார்.
இன்று அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் அண்மையில் சாவகச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக மேடையில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களும் தமது கட்சியின் மேடையில் வந்து ஏறுவதற்கு தயாராகிறார்கள் என கூறியிருக்கின்றார், இது தொடர்பில் உங்களது கருத்து என்ன என வினவிய போதுமேற்கண்டவாறு தெரிவித்தார்.
அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம் அவர்கள் அனைவரையும் இணைத்து எதிர்காலத்தில் செயல்படுகின்றபோது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கும்.
இந்தத் தேர்தலில் தமிழரசு கட்சி எடுத்த தீர்மானத்தின் பின்னர் இளம் உறுப்பினர்கள் சிலர் எமக்கு தெரிந்த வகையில் வேறு கட்சிகளிலே சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதை அறிகின்றோம்.அப்படியானவர்கள் பற்றி தமிழரசு கட்சியில் மத்தியசெயற்குழுவில் பரிசீலிக்கவுள்ளோம். கட்சி மாறியவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளோம் என்றார்.