கடற்றொழிலுக்குச் சென்று தெப்பம் கவிழ்ந்ததில் காணாமல்ப் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது! பி.ரவிச்சந்திரன் (39) கரிதாஸ் வீதி, வள்ளிபுனம்...
கடற்றொழிலுக்குச் சென்று தெப்பம் கவிழ்ந்ததில் காணாமல்ப் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது!
பி.ரவிச்சந்திரன் (39) கரிதாஸ் வீதி, வள்ளிபுனம், மு/புதுக்குடியிருப்பு பகுதியைச் சேரந்த மீனவனே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
யாழ் வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியி கடற்கரையில் இருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக நேற்று முன்தினம் மாலை ஞாயிறு (12) சென்றிருந்தார்.
இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் தெப்பம் கடலில் மூழ்கியுள்ளது. இதன் போது ஒரு மீனவன் நீந்தி கரைசேர்ந்துள்ள நிலையில் குறித்த மீனவன் கடலில் மூழ்கி காணமல்ப் போயுள்ளார்.
இன்று அதிகாலை குடாரப்பு பகுதியிலேயே சடலம் கரையோதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.சிவராசா மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.