யாழில் இந்திய அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட கலாசார மண்டபத்தை தமிழர்களிடம் கையளிக்குமாறு அண்ணாமலையிடம் கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்...
யாழில் இந்திய அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட கலாசார மண்டபத்தை தமிழர்களிடம் கையளிக்குமாறு அண்ணாமலையிடம் கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்தார்.
மேலும் தெரிவிக்கையில், சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த தமிழினம் தன் மொழியை, பண்பாட்டை, அடையாளங்களை தொலைத்து விடாமல் இவ்வாறான தமிழ் சார்ந்த விழாக்களை தொடர்ந்தும் நடாத்தி வருகிறது.
அப்படியான விழாக்களில் ஒன்றான கம்பன் விழாவில் இந்தியாவின் இளம் தமிழ் அரசியல்வாதியான அண்ணாமலை அவர்கள் திடீரென கலந்து கொண்டமை எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது்
இந்த சந்தர்ப்பத்தில் அண்ணாமலையானிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழர்களது மண்ணில் தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட கலாசார மண்டபத்தை தமிழர்களிடம் கையளிக்க வேண்டும் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.