ஆதிகாலம் தொட்டு நாடுகளுக்கு இடையே வணிக கலாசார தொடர்புகள் இருந்துள்ளது இத்தொடர்புகள் ஆறு குளம் கடல் என பல வகை சிறப்பாக நீர்வழிப் பாதையில் நடை...
ஆதிகாலம் தொட்டு நாடுகளுக்கு இடையே வணிக கலாசார தொடர்புகள் இருந்துள்ளது இத்தொடர்புகள் ஆறு குளம் கடல் என பல வகை சிறப்பாக நீர்வழிப் பாதையில் நடைபெற்றுள்ளன இத்தொடர்புகளுக்கு கடற்கலங்களே முக்கிய போக்குவரத்து சாதனமாக இருந்துள்ளது இக் கடற்கலங்கள் தோன்றி வளர்ந்த வரலாறு பற்றியும் அவற்றின் வடிவங்கள் கால ஓட்டத்தில் அவற்றின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்பன பற்றி பல அறிஞர்களும் ஆராய்ந்து உள்ளனர். மேலும் இவற்றை தெரிந்து கொள்ள வரலாற்று இலக்கியங்கள் வெளிநாட்டார் குறிப்புகள் கல்வெட்டுக்கள் சிற்ப ஓவியக் கலைகள் நாணயங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழகத்தில் சங்க காலம் தொட்டு நாயக்க மன்னர் காலம் வரை வெளியிடப்பட்ட சேர, சோழ பாண்டிய பல்லவர் விஜயநகரப் நாயக்கர் கால நாணயங்களிலே கடற்கலங்கள் முக்கிய சின்னங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிற்பங்கள் ஓவியங்களிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு கடல் போக்குவரத்து சாதனங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வடிவங்களையும் காலத்துக்கு காலம் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிந்து கொள்வதற்கு நாணயங்கள் கல்வெட்டுக்கள் சிற்பங்கள் ஓவியங்கள் முக்கிய ஆதாரங்களாக காணப்படுகின்றன.அவை வரலாற்று இலக்கியங்களில் சொல்லப்படும் கடற்கலங்களின் உருவ அமைப்பையும் அவற்றின் பெயர்களையும் அடையாளப்படுத்த உதவுகின்றன. இவற்றின் அடிப்படையில் கடற்கலங்களின் தோற்றம் வளர்ச்சி ஆரம்பமானது
கடல்சார் தொல்லியல்(Maritime archaeology) என்பது கடற்பகுதியோடு தொடர்புடைய தொல்லியல் ஆகும். இது, பழங்காலத்துக் கடற்கலங்கள், கடல்சார் கரையோர வசதிகள், கடல்வழிச் சரக்குகள், கடலுள் அமிழ்ந்த நிலத்தோற்றங்கள் என்பவற்றூடாக கடலுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஊடு தொடர்புகளை ஆய்வு செய்யும் துறைகளுள் ஒன்று. கடலில் மட்டுமன்றி ஏரிகள், ஆறுகள் முதலியவற்றிலும் கப்பல் போக்குவரத்துகள் இடம் பெறுவதால், இவை எல்லாவற்றுடனும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளின் வரலாற்றை ஆய்வு செய்யும் துறை நீரடித் தொல்லியல் (underwater archaeology) என அழைக்கப்படுவதுண்டு. இதன் ஒரு பிரிவாகக் கடற் பயணங்களுக்குப் பயன்பட்ட கலங்களின் அமைப்புத் தொழில்நுட்பம், கடல் பயணங்கள் என்பன தொடர்பான ஆய்வுத்துறை கடற்செலவுத் தொல்லியல் (nautical archaeology) எனப்படுகின்றது.
பொதுவாகக் கடல்சார் தொல்லியல் களங்கள் கடலுள் அமிழ்ந்த துறைமுகப் பகுதிகள், மூழ்கிய கப்பல்கள் போன்றவற்றை உள்ளடக்குவனவாக உள்ளன. கடலுக்குள் அல்லது பிற நீர்ச் சூழல்களில் காணப்படும் தொல்பொருட்கள், நிலப்பகுதிகளில் காணப்படும் தொல்பொருட்கள் தொடர்பில் காணப்படுவதிலும் வேறுபட்ட காரணிகளின் தாக்கத்துக்கு உள்ளாகின்றன. ஒரு நோக்கில், கடல்சார் தொல்லியல் நிலப்பகுதித் தொல்லியலில் காணப்படாத பிரச்சினைகளைக் கொண்டதும், நீரில் மூழ்குதல் போன்ற பல்வேறு சிறப்புத் திறமைகள் தேவைப்படுவதுமான தனியான துறையாகக் கருதப்படும் அதே வேளை, கடல்சார் நடவடிக்கைகள், நிலப்பகுதிகளின் பொருளியல் மற்றும் சமூக நிலைமைகளோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதனால் இன்னொரு நோக்கில், இது நிலஞ்சார் தொல்லியலுடன் ஒன்றிணைவான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
சமகாலத்தில் பெரிதும் பேசப்படும் கடல்சார் தொல்லியலுக்கு குறுகிய கால வரலாறை காணப்படுகின்றது கடற்பயணம் ஆரம்பித்த காலம் தொட்டு கடற்கரங்கள் பயன்படுத்தப்பட்டன தொழில்நுட்பம் குறைந்ததால் கடற்கரங்கள் அதிக அளவில் கடலில் மூழ்கினர் கடற்கரங்கள் மட்டுமல்ல அவற்றில் கொண்டுவரப்பட்ட பொருட்களும் மூழ்கின அவற்றை மீட்க பண்டு தொட்டு பலன் என்றனர் பொருளீட்டல் அதன் முக்கிய நோக்கமாகும் அவற்றுள் ஆழம் குறைந்த தெளிந்த கடலின் கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் மீட்டனர் மனிதன் நடமாட்டம் அற்ற ஆழமான கடலிலும் பணிப்படந்த கடலிலும் சிதைவடையாத கப்பல்கள் மூழ்கிய நிலையில் உள்ளன கடந்த நூற்றாண்டில் மூழ்கிய கப்பல்களையும் அவற்றின் பாகங்களையும் கடற்கரங்களில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களையும் புதிய பொருட்களாக தேடி கண்டுபிடித்தனர்.
மேலும் நோக்கின் 17ஆம் நூற்றாண்டு கடலில் மூழ்கிய கப்பலின் நீர் மூகழ்வு மணியையும் 18ம் நூற்றாண்டு நீர் மூழ்கி உருளைத் தொட்டி என்பன கண்டுபிடிக்கப்பட்டன ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே இதன் வளர்ச்சி தொடங்கியது 19ஆம் நூற்றாண்டில் இருந்து கடல் அகழ்வாய்வுக்கான நீர் மூழ்கும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன இரண்டாம் உலகப்போரில் கடற்கலங்களும் அவற்றின் பாகங்களும் கடலில் அதிக அளவில் மூழ்கியதைத் தொடர்ந்து தொல்பொருள் அகழ்வாய்வு அறிஞர்கள கடல் அகழ்வாய்வு செய்யத் தூண்டியது 19ஆம் நூற்றாண்டில் குளிர் நீர் நிறைந்த இங்கிலாந்தின் கடற் பகுதியில் மூழ்கி இருந்த கப்பலில் இருந்து டீன் சகோதரர் கண்டுபிடித்த தொல்பொருட்கள் கடல்சார் தொல்லியல் ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது 1822 ஆம் ஆண்டு இங்கிலாந்து ரை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் மக்களின் பார்வைக்கு முதன் முறையாக வைக்கப்பட்டது. ஆயினும் மக்களால் அது சிதைக்கப்பட்டது இந்நிகழ்வு மக்கள் மத்தியில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதில் ஆர்வம் இருக்கவில்லை என்பதை காட்டியது.
தமிழ் மணி (Tamil Bell) என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கலக் கப்பல் மணி ஆகும். இது வில்லியம் கொலென்சோ என்னும் மதப்பரப்புனரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் நோர்த்லாந்து பிராந்தியத்தில் வங்காரை அருகே மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்தி வந்தனர்.இந்த மணி 13 செ.மீ உயரமும் 9 செ.மீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்காலத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகைய்யதீன் பக்சு உடைய கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மாவோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்தது என்பதற்கு இது சான்றாக அமையலாம் என இந்தியவியலாளர் இராமச்சந்திர தீட்சிதர் தெரிவிக்கிறார். திருக்கோணமலையில் இருந்து கடலோடிகள் வன்னிக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையே வணிகத் தொடர்பு மேற்கொண்டிருந்த காலத்தில், இந்தியர்களுடனான தொடர்பினால், போர்த்துக்கீசியக் கப்பல் மூலம் இம்மணி நியூசிலாந்தை எட்டியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அத்துடன், பல இந்தியக் கப்பல்கள் இக்காலப்பகுதியில் ஐரோப்பியர்களினால் கைப்பற்றப்பட்டன. இதனால் மூழ்கிய கப்பல் ஒன்றின் சிதைவுகள் நியூசிலாந்தில் கரையொதுங்கியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1865 ஆம் ஆண்டு டென்மார்க்கில் புதையுண்டிருந்த கி.பி நான்காம் நூற்றாண்டுக்குரிய கப்பல்களை கார்ட் என்பவர் கண்டுபிடித்தார். இதுவே கடல்சார் கப்பல்கள் கடற்கரை நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வாக கூறப்படுகின்றது.
ஆயினும் நிலத்தில் அகழ்வு செய்து கடல்சார் கப்பல்களை கண்டுபிடித்த அளவிற்கு 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கடலில் அகழ்வாய்வுகள் செய்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை. இக்காலப் பகுதியில் லண்டனில் உருவாக்கப்பட்ட தொல்பொருள் சேகரிப்பு சங்கம் கடலில் நீரில் மூழ்குபவர்களை அனுப்பி கடல் ஆய்வுகளை செய்வித்தது அதன்மூலம் ரோமர் கால மண்பாண்டங்களை கண்டுபிடிக்க முடிந்தது ஆயினும் இக்குழுவில் தொல்லியல் அறிஞர்கள் பங்கெடுக்கவில்லை ஆயினும் இது கடல்சார் அகழ்வுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மத்தியதைக் கடற் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கடலில் மூழ்கிய பண்டைய பொருட்களையும் வெண்கலத்தால் ஆன சிலையையும் கண்டுபிடித்தனர். இதன் காரணமாக கிரீஸ் அரசின் அருங்காட்சியாக இயக்குனர் ஜோச் என்பவர் கடலில் ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பி வைத்தனர். இந்தக் குழுவின் ஆய்வின் போது கி.பி 86 ஆம் (முதலாம் நூற்றாண்டு) ஆண்டில் கிரேக்க நாட்டிலிருந்து ரோமுக்கு சென்ற போது மூழ்கிய பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் உலகத் தொல்லியலாளர்களை மத்திய கடல் பகுதியை நோக்கி நகர வைத்தது ஆயினும் முறையான கடல்சார் ஆய்வுகள் இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெறும் வரை மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது.
மேலும் நோக்கின் இக்காலப் பகுதியில் இருந்து மரபு வழி நீர்மூழ்களுக்குப் பதிலாக நவீன தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு பாரமான நீர்மூழ்கி கருவிகள், அதிக பயிற்சி தேவையாக இருந்தது. இதன் மூலம் சாதாரண மனிதர்களும் கடலில் மூழ்கி தொல்பொருட்களை கண்டறியும் கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் வளர்ந்தன. அவற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜேக்கஸ் கூஸ்து என்பவர் எமில் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த நீர்மூழ்கி கருவே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இது புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது.
1960இல் பென்சில்வேனியா அமெரிக்கா அருங்காட்சியக குழு கெலிதேனியா முனைப் பகுதியில் 30மீட்டர் ஆழத்தில் கடல் அகழ்வாய்வு செய்து கிமு பன்னிரண்டாயிரம் ஆண்டளவில் மூழ்கிய கப்பல்களை கண்டுபிடித்து ஆய்வு செய்தது. இதுவே கடல் அகழ்வாய்வில் கிடைத்த பெரும் வெற்றியாக கூறப்படுகின்றது. இந்த ஆய்வின் மூலம் சொப்புக்காலத்தை சேர்ந்த மத்தியதரை கடற் பகுதியில் நடைபெற்ற வணிகத்தை அறிய முடிந்தது. இக்கண்டுபிடிப்பை தொடர்ந்து துருக்கிய கடற் பகுதியில் தொடர் கடல் ஆய்வுகளை அமெரிக்கர்களின் உதவியுடன் மேற்கொள்ள வழி கோழியது.சுவீடன் நாட்டின் ரொக்கம் துறைமுகத்தில் 1628 இல் மூழ்கிய வாசா என்னும் போர்க்கப்பல் 1956-ல் கண்டுபிடிக்கப்பட்டு 1961ல் முழுமையாக வெளிக்கொணர்ந்தமை கடல்சார் தொல்லியல் ஆய்வின் தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு வளர்ச்சி கட்டமாக பார்க்கப்பட்டது.
மேலும் நோக்கின் 1965இல் இங்கிலாந்து கடற் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிபி ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு கடற்செலவு தொல்லியல் கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடல் அகழ்வாய்வின் தொழில்நுட்ப முறைகள் மேலும் வளர்ச்சியுற்றன. 1960 களின் பின்னர் தொடங்கப்பட்ட நீர்மூழ்கிக் கழகங்கள் பின்னர் கடலில் மூழ்கிய பல கப்பல்களை கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்துக்குரிய மேரஜ ரோஸ் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டமை முக்கிய நிகழ்வாகும். கடல் தொல்லியலின் முக்கியத்துவம் கருதி முதன்முறையாக பிரித்தானியாவில் 1973 ஆம் ஆண்டு கடலாய்வுத்துறை நிறுவப்பட்டது. இதன் நோக்கம் கடலில் இருந்து தொல்பொருட்கள் கொள்ளையிடப்படுவதை தடுத்து கடல்சார் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பது ஆகும். இதற்காக இவ்வாண்டில் உலகளாவிய கடல்சார் தொல்லியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1970 தொடக்கம் 1979 காலப்பகுதியில் ஐரோப்பா அமெரிக்கா கடற்பிறப்பில் தங்கம் வெள்ளி ஆகிய பொருட்களுடன் மூழ்கிய பல கப்பல்களை வணிக நோக்கில் கொள்ளையிட பலர் முயன்றனர். இவற்றை தடுக்கும் நோக்கில் அமெரிக்க மாநிலங்களில் பல சட்டங்கள் ஆய்வு நிறுவனங்கள் தோன்றின இவையே தொல்லியல் ஆய்வு நெறிமுறைகளுக்கு உட்பட்ட அகழ்வாய்வுகள் கடலில் மேற்கொள்ள காரணமாயின.
மேலும் நோக்கின் இவற்றைத் தொடர்ந்து கனடா முதலான நாடுகளில் கடல் சார்ந்த அகழ்வாய்வுகள் தோன்றினர் அவற்றுள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கல்பல் கண்டுபிடிக்கப்பட்டமை முக்கிய நிகழ்வாகும் 1970 தொடக்கம் 1979 காலப்பகுதியில் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஜெரர்மிகிறின் தலைமையில் பல கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.கென்னிய நாட்டு மொம்பாஸ் துறைமுக பகுதியில் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் கடலில் மூழ்கிய 14 தொடக்கம் 15ஆம் நூற்றாண்டுக்குரிய கப்பல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 1980 தொடக்கம் 1989 காலப்பகுதியில் இஸ்ரவேலை சேர்ந்த கடல் சார்ந்த தொழிலில் அறிஞர்கள் செங்கடல் மத்தியகரை கடற்பரப்பில் பல ஆய்வுகளை நடத்தினர் 1980களில் யப்பான், இந்தியா ,இலங்கை போன்ற நாடுகளில் கடல்சார் ஆய்வுகளில் ஆர்வம் காட்டதொடங்கினர்.
என்.ரிலக்க்ஷனா
ஊடகக் கற்கை இறுதி ஆண்டு மாணவி
யாழ்.பல்கலைக்கழகம்
ஊடகக் கற்கை இறுதி ஆண்டு மாணவி
யாழ்.பல்கலைக்கழகம்