தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவ...
தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் சிரியாவில் நடந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் போராளிகள் பலர் உயிரிழந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள தமது இருப்புக்கள் மற்றும் படைகள் குறிவைக்கப்பட்டால் பதிலடி கொடுக்கும் திறமை தம்மிடம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழன் அன்று ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் என்ற சந்தேகத்திற்குரிய தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா வான்வெளி தாக்குதலை நடத்தியிருந்தது.