தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி கப்பலொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3.5 பில்லியன் ரூபா என த...
தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி கப்பலொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3.5 பில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.
கப்பலில் இருந்த ஹெரோயின் தொகை மற்றும 6 சந்தேக நபர்கள் இன்று காலை காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் 175 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.