சிரியா மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதில் சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் இர...
சிரியா மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதில் சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி பல ரொக்கெட்டுகள் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
காசா, லெபனான், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை உள்ளிட்ட பல முனைகளில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் இன்று அதிகாலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படையணிகளால் ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசா மற்றும் தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீனிய குழு, ஹமாஸுக்கு சொந்தமானது என கூறிய பல தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது.