முழங்காவில் பகுதியில் கார் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார...
முழங்காவில் பகுதியில் கார் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மன்னாரைச் சேர்ந்த செல்வமகேந்திரம் கமலரூபன், வயது 36 என்னும் நவாலி மானிப்பாயை சேர்ந்தவரே இதன்போது படுகாயமடைந்தவராவார்.
யாழில் இருந்து மன்னார் நோக்கி நேற்று இரவு 9.30 மணியளவில் பயணித்த சமயம் முழங்காவில் பகுதியில் பொலிசார் வீதிச் சோதனையின்போது வழி மறித்த சமயம் நிறுத்தாமல் சென்றபோதே துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சூடுபட்டவர் மன்னார் வரை பயணித்து மன்னாழ. வைத்தியசாலையில் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.