யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி (சமிக்ஞை) பலகையில் யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்ற அறிவித்தலை ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளனர...
யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி (சமிக்ஞை) பலகையில் யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்ற அறிவித்தலை ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளனர்.
பண்ணைச் சுற்று வட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறுகோரி யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
இந்நிலையில் சொரூபத்தை பிரதிஷ்டை செய்தவர்களை நாளை 18ஆம் திகதி உரிமை கோருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த நீதிமன்ற அறிவிப்பை பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வீதி சமிக்ஞை பலகையில் ஒட்டிய பொலிஸார் அதனை காட்ப்படுத்தியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.