உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றதாக முன்னாள் ஜனாதிபத...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை பொறுமையை கடைப்பிடிக்க தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் இதுவரை உறுதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை. உலக நாடுகள் சிலவற்றில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடித்துள்ளன.
விசாரணைகளை வேகமாக பூர்த்தி செய்து என்னை சிறைக்கு அல்லது தூக்குமேடைக்கு அனுப்ப கர்தினால் ஆசைப்படுகின்றார் விசாரணைகள் முடிவடையாமலே இந்த குற்றத்தை செய்வதற்கு அவர் விரும்புகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.