நல்லூர் றோட்டரிக் கழகத்தின் ஸ்தாபக தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது pa...
நல்லூர் றோட்டரிக் கழகத்தின் ஸ்தாபக தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது paul Harris panthers அணியினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரியாலை காசிப்பிள்ளை மைதானத்தில் நல்லூர் றோட்டறி மற்றும் யாழ். பெனின்சுலா,சுழிபுரம், நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழக உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அணிவீரர்களை ஏலத்தில் உள்வாங்கி நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு paul harris panthers மற்றும் Jennifer Johnes avengers அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற avengers அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அந்த வகையில் panthers அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவரில் 77 ஓட்டங்களை குவித்தது.
இதில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய panthers அணித்தலைவர் யூட் வலன்ரைன் 21 பந்துகளில் 60 ஓட்டங்களை குவித்தார்.
78 ஓட்டங்களை பெற்றால் வெற்றி எனும் முனைப்பில் களமிறங்கிய avengers அணியினர் 6 ஓவர்களில் 64 ஓட்டங்களை பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.
சுற்றுப்போட்டிக்கான Team Selection மற்றும் Players Selection ற்கான Auction சர்வதேச முறைப்படி திட்டமிடப்பட்டு எவ்வித முரண்பாடுகளும் இன்றி நேர்த்தியான முறையில் நடாத்தப்பட்டு அணிகளும் வீரர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக இலங்கை மாலைதீவு துணை றோட்டறி ஆளுநர் டாக்டர். ஜெயக்குமார், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக IDM nations campus வடக்கு கிழக்கு பிராந்திய இணைப்பாளர் Dr.Andrew anesly, IDM nations campus யாழ். இயக்குநர் ராஜீவ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டியில் KR ravindran warriors மற்றும் shekar mehta gladiators அணிகளும் பங்கேற்றிருந்தனர்.