மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட காவல்துறை பிரிவை நிறுவ அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானி...
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட காவல்துறை பிரிவை நிறுவ அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நாட்டின் பல இடங்களில் இருந்தும் இவ்வாறான குழுக்கள் தோன்றி அரசை சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயற்படுவதாக அதிபருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைவாகவே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, காவல்துறை மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதிபர் அலுவலக பிரதானி- தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இன்று (29) பணிப்புரை விடுத்துள்ளார்.
''அதிபருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், வரலாறு காணாத வகையில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மையை நாடு எதிர்கொண்டு, தற்போது நிலைமை சிரமத்துடன் முன்னோக்கி வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உண்மைகள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற நாசகார செயல்களை கண்காணித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் சமூகத்தை சென்றடையும் முன்பே தடுக்கும் பொறுப்பு புதிதாக நிறுவப்படும் காவல்துறை பிரிவிற்க்கே உள்ளது.
இந்நிலையில், அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக புதிய காவல்துறை பிரிவு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும்." என சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.