தாய்வான் எல்லையில் ஒரே நாளில் 33 சீன போர் விமானங்கள் பறந்ததால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவில் 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போர...
தாய்வான் எல்லையில் ஒரே நாளில் 33 சீன போர் விமானங்கள் பறந்ததால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனாவில் 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தாய்வான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என ஜனாதிபதி ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தாய்வானுடன் வேறு எந்த நாடும் உத்தியோகப்பூர்வ உறவுகளை ஏற்படுத்தக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் தாய்வானை தனி நாடாக செயற்பட விடவேண்டும் என சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. எனவே, தாய்வான் எல்லையில் சீனா அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தங்கள் நாட்டு எல்லையில் 33 சீன போர் விமானங்கள் தென்பட்டதாகவும், அந்த போர் விமானங்கள் தாய்வானின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.