யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் சமரச பேச்சுக்களை அடுத்து அதனை கைவிட...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் சமரச பேச்சுக்களை அடுத்து அதனை கைவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டார் என தெரியவருகிறது.
சிறைச்சாலை கூரை மேலேறி நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
41 வயதுடைய மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார என்பவரே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.