பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லூஸி” (இடப்பக்க இரை). இந்தத் திரைப்படத்தின் ம...
பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லூஸி” (இடப்பக்க இரை). இந்தத் திரைப்படத்தின் முதற்பார்வை கடந்த மே 1 ஆம் திகதி வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படத்தில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சர்மிளா வினோதினி, சுகிர்தன், ஜொனி ஆன்ரன், கௌசி ராஜ், ஆர்.ஜே.நெலு, ஷாஷா ஷெரீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளதுடன், பத்மயன் சிவா இசையமைத்துள்ளார். ஃபஸ்ட் லுக் மற்றும் ட்ரெயிலரைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் படத்தினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, படம் தொடர்பில் இயக்குனர் ஈழவாணி தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
உழைப்புக்கானதே பயனும் பலனும் என நம்புகிறவள் நான், வன்மங்களோடான குழுக்களாகி படைப்புகளை ஒதுக்கினாலும் காலத்தையும், இந்த வன்மங்களையும் வென்று படைப்புக்கள் பேசப்படும், அதுவே வெற்றி என்பதே உண்மை.
எல்லா படைப்பிற்கும் பாரிய உழைப்பைக் கொடுத்திருப்போம். அதுவும் ஈழ சினிமா என்றால் உழைப்பு பணம் விட்டுக்கொடுப்பு எல்லாம் சேர்த்தால் தான் சிறப்பாக முழுமைப்படுத்த இயலும்.
அந்த வகையில் லூசியை உருவாக்கியிருக்கிறோம்.
பல நடிகைகள் நடிகர்கள் தொழிநூட்பக்கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். படைப்பை அதன் கருத்தை சொல்ல வந்த பிரச்சனைகளைப் பாருங்கள்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தினமும் நடக்கும் பிரச்சனைகள், உங்கள் பெண்புள்ளைகள் தினமும் குறிப்பிட்ட வீத்த்தில் சீரழிக்கப்படுகிறார்கள்.
இதையே லூஸி சொல்லியிருக்கிறாள்
இது உங்களுக்கான படமே.