பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும்...
பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(29) பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பொது மக்களின் எதிர்ப்பு போராட்டங்களைக் கையாள்வதில் அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மே மாதம் 12ம் திகதி கொழும்பில் வெளியிட்டது.
பிராந்திய மட்டத்தில் இவ்வழிகாட்டுதல்களை அறியப்படுத்துவதும் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துக்களை பெற்று இவ்வழிகாட்டுதலை மெருகேற்றுவதும் இக்கலந்துரையாடலின் நோக்கமாக காணப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், தன்னார்வ ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.