மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது. கலால் வரி வருவாய் குறைந்ததால் ...
மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது.
கலால் வரி வருவாய் குறைந்ததால் மதுபானம் மற்றும் பியர் விற்பனை 40% சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மது மற்றும் பியர் விற்பனை வேகமாக குறைந்து வருவதாகவும் உற்பத்தி நிறுவனங்கள் நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன.
அதிக விலையே விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெற்றது. வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வற் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுபான வரியை ரூ.2000 குறைக்க வேண்டும் என்றும் உற்பத்தி நிறுவனங்கள் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.