வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் , கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்...
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் , கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல வடமேல் மற்றும் சபரகமுவ மாகாண ஆளுநர்களாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். முன்னாள் எம்.பிக்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ,நவீன் திசாநாயக்க , பாலித ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்கள் இவற்றுக்காக பரிசீலிக்கப்பட்டுள்ளன.