"எங்களின் குரல்கள்" அமரா பெண் குடும்ப தலைவர்களின் கொள்கை பரிந்துரைகள் சமர்ப்பண நிகழ்வு 26.05.2023 அன்று திருமதி வேந்தகுமார் ஜீவசர...
"எங்களின் குரல்கள்" அமரா பெண் குடும்ப தலைவர்களின் கொள்கை பரிந்துரைகள் சமர்ப்பண நிகழ்வு
26.05.2023 அன்று திருமதி வேந்தகுமார் ஜீவசர்மிலா தலைமையில் யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் வடமாகாண பங்கு தாரர்களுடன் கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண் குடும்ப தலைவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.
அதில் விதவைகளுக்கு பட்டயம் ஏன் அவசியம் என்று பங்கு தாரர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
அத்துடன் பால்நிலை அடிப்படையிலான நீதியும் பாதுகாப்பும் , பொருளாதார உரிமையும் வாழ்வாதாரமும்
,உரிமைகளும் சமூகப்பாதுகாப்பும் ,கல்வி ,போசாக்கும் சுகாதாரமும்
சமூக அரசியல் உரிமைகளும் அவற்றுடனான பங்கேற்பும்
சமூக கலாசார பிரச்சனைகள்
விசேட தேவையுடையோரின் உரிமைகள்
கடத்தப்பட்டோர்/வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உரிமைகள்
நிலைமாறுகாலநீதி பொறிமுறைகளும்
அதன் அமுலாக்கமும் போன்ற தலைப்பின் கீழ்
அமரா அங்கத்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர் அந்த பட்டயத்தில் நீக்கப்பட வேண்டியவையும் சேர்க்கப்பட வேண்டியவை தொடர்பில் பங்கு தாரர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்