எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நட...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஒரு பரந்த கூட்டணியை கட்டியெழுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம் வழங்கவும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் முழு அதிகாரமும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குவதற்கும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.