2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இலங்கை உழைக்கு...
2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஒரு விசேட ஆய்வுக் குழுவை நியமித்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரஜ்னி கமகே மற்றும் ஹரீந்திர பி.தசநாயக்க மற்றும் அபர்ணா ஹெட்டியாராச்சி ஆகிய சுயாதீன ஆய்வுக் குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2022ஆம் ஆண்டு மார்ச் 30 மற்றும் ஆகஸ்ட் 31 க்கு இடையில் இடம்பெற்ற சம்பவங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் நீண்ட காலமாக சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சூழலில் பணியாற்றி வரும் சூழலில் இந்த விசாரணை அறிக்கை இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு முறையான வேலைத்திட்டத்தின் அவசியத்தை எடுத்துக் காட்டியுள்ளதுடன், சமூகத்தின் பல்வேறு மட்டங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமானது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புப் படையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம், மோதல் அறிக்கையிடலில் இரு தரப்பினரும் பணியாற்றுவதன் மூலம் சேதத்தை குறைக்க முடியும்.
ஆய்வு அறிக்கையின் பிரதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடமும் அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டது.
ஆய்வாளர் ஹரீந்திர பி.தசநாயக்க மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், செயலாளர் சு.நிஷாந்தன், பொருளாளர் டி.நடராசா, சங்க உறுப்பினர் லக்ஷ்மன் முத்துதந்திரிகே ஆகியோர் அடங்கிய குழுவே இந்த ஆய்வு அறிக்கையை கையளித்து.