6-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகின்றது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில்,...
6-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகின்றது.
லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றன.
இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கின்றது.
இதேபோல, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இன்றைய போட்டி குறித்து தோனி - வார்னர் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.