தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் 16 சதவீதத்தால் குறைக்கப்படு...
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் 16 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, விலைக் கட்டுப்பாட்டின் மூலம் கட்டுப்படுத்தப்படும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபை மருந்துகளின் விலைகளைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.