கொழும்பு நவம் மாவத்தையில் உள்ள கட்டிடமொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளன...
கொழும்பு நவம் மாவத்தையில் உள்ள கட்டிடமொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளவர்களே குறித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சந்தேகநபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (04) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.