மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதில் பொலிஸாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த மோதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இதையடுத்து சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.