சர்ச்சைக்குரிய Bupivacaine மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங...
சர்ச்சைக்குரிய Bupivacaine மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் குறித்த மருந்துத் தொகுதியை விநியோகித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் S.D.ஜயரத்ன தெரிவித்தார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசேரியன், ஹேர்னியா சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அண்மையில் பதிவானது.
மயக்கமடையச் செய்வதற்காக Bupivacaine என்ற மயக்க மருந்தினை பயன்படுத்திய பின்னர் அவர்களுக்கு அவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக பின்னர் தெரியவந்தது.