பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையை கண்டித்துள்ள யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் உ...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையை கண்டித்துள்ள யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து இன்றையதினம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட நிலையில் வி.மணிவண்ணன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அவுஸ்திரேலியா தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளை நேற்றைய தினம் தான் சந்தித்தபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சட்டவிரோதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை சுட்டிக்காட்டியதாகவும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாததுடன் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.