கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினமே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உற...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினமே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பொலிஸார் விடுக்கும் அறிவிப்பை மேற்கோளிட்டு எம்.ஏ.சுமந்திரன் டுவிட்டரில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரை கைது செய்யும் நடவடிக்கை நாடாளுமன்ற சிறப்பரிமையை மீறுகிற செயல் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு நடைபெறுகின்ற வேளையில் அதில் கலந்து கொள்வதை தடுக்கும் இத்தகைய செயற்படு சட்டவிரோதமானதும் அடக்குமுறையின் வெளிப்பாடு என்றும் அவர் வலியறுத்தியுள்ளார்.