முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு வி...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(29) காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாக விகாரதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.