யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து வந்த மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வழிபாட்டிற்கு பின்னர் ஆலயசூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.