துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மத...
துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இவர் விமானத்தில் வந்தார்.
இந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் வந்த ஆண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
மேலும், அவர் அணிந்து வந்த காலணியை கழட்டி சோதனை மேற்கொண்டதில் காலணியின் நடுவில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.