யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வல்லை - தொண்டமானாறு வீதியில...
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
வல்லை - தொண்டமானாறு வீதியில் உள்ள வெளியில் சடலம் ஒன்று காணப்படுவதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிற நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.