அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் முன்னாள் அமெரிக்க ஐனாதிபதி டொனால்டு டிரம்ப், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க முன்னாள...
அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் முன்னாள் அமெரிக்க ஐனாதிபதி டொனால்டு டிரம்ப், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக கடந்த காலத்தில் புகார் எழுந்தது.
2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி நீதிமன்றில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி நீதிமன்றில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார். இந்நிலையில், அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் டொனால்டு டிரம்ப், அவரது உதவியாளர் வால்ட் நவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே, ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.