இந்தியாவில் பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இன்று மாலை 6 மணியளவில் இடிந்து விழுந்தது. அந்த காட்சியை உள்ளூர் மக்கள் தங்...
இந்தியாவில் பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இன்று மாலை 6 மணியளவில் இடிந்து விழுந்தது.
அந்த காட்சியை உள்ளூர் மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். தற்போது சமூக வலைதளத்தில் அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சுமார் 1,717 கோடி ரூபாய் செலவில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அகுவானி சுல்தான்கஞ்சில் கங்கை பாலம் என இது அறியப்படுகிறது.
இதுவரை இந்த பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலம் சூறாவளி காற்றில் சேதமடைந்ததாக தகவல். அதே போல இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.