வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேட தபால் முத்திரை மற்றும் அஞ்சலுறை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று(17...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேட தபால் முத்திரை மற்றும் அஞ்சலுறை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று(17) பிற்பகல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது.
இலங்கை தபால் மா அதிபர் றுவான் சத்குமாரவினால் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேடமாக வடிவமைக்கப்பட்ட முத்திரை மற்றும் அஞ்சலுறை வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன்பொழுது பாடசாலையின் அதிபர் ,முன்னாள் அதிபர்கள் , தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி பத்மதயாளன் ஆகியோர் முத்திரை மற்றும் அஞ்சலுறையை பெற்றுகொண்டனர்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம், அஞ்சல்மா அதிபர் (செயற்பாடுகள்) ராஜித கே ரணசிசிங்க வடக்கு அஞ்சல் மா அதிபர் மதுமதி வசந்தகுமாரி , யாழ் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ் ஏ டி பெர்ணான்டோ, முத்திரை பணியக பணிப்பாளர் லங்காதி சில்வ ,நுண்ணாய்வு பரிசோதகர் கே.செந்தில்குமார், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.