யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை இலங்கை கடற்படையினருக்காக நிரந்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை இலங்கை கடற்படையினருக்காக நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து 5 வது நாளாக இன்று காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்ற வேளை மக்களின் எதிர்ப்பால் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான 15 பேர்ச் காணியை அளவீடு செயவயும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படவிருந்தது.
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க பிரதிநிதி இரத்தினசிங்கம் முரளீதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.