உலகம் முழுவதும் வாசனை திரவியங்களுக்கென பெயர் பெற்ற இலங்கையில் இருந்து கறுவா மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், பேரு போன்ற நாடுக...
உலகம் முழுவதும் வாசனை திரவியங்களுக்கென பெயர் பெற்ற இலங்கையில் இருந்து கறுவா மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், பேரு போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதி சந்தையில் கசியா கறுவா மற்றும் கறுவா என இரண்டு வகையான கறுவாப்பட்டை உள்ளது மற்றும் இவற்றில், கசியா கறுவாப்பட்டையின் தரம் உண்மையான கறுவாப்பட்டையின் தரத்தை விட குறைவாக இருப்பதால், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உண்மையான கறுவாப்பட்டைக்கு இன்னும் அதிக கேள்வி உள்ளது.
இந்நிலையில் , எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து சீனாவிற்கு கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.பி.திஸ்னா தெரிவித்துள்ளார்.
கசியா கறுவாப்பட்டையை அதிகம் நுகரும் நாடுகளில், சீனா தற்போது முதலிடத்தில் உள்ளது. எனவே, சீனாவுக்கு கறுவாப்பட்டை ஏற்றுமதி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால், அது நாட்டின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சியாக அமையும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.