யாழில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குருநகர் பகுதியை சேர்ந்த 23 வயதான சந்தேகநபர் 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொ...
யாழில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குருநகர் பகுதியை சேர்ந்த 23 வயதான சந்தேகநபர் 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கடந்த யூன் மாதம் குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முயற்சித்தபோது தப்பியோடி கோப்பாய் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு ஹெரோயின் பொருளை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தபோது5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு குறித்த நபர் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.