குருந்தூர் மலை பௌத்த ஆலயத்தை அழிக்கமுயன்றவர்களை சந்தித்துள்ளார் கனடா உயர்ஸ்தானிகர். இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக a person "Non...
குருந்தூர் மலை பௌத்த ஆலயத்தை அழிக்கமுயன்றவர்களை சந்தித்துள்ளார் கனடா உயர்ஸ்தானிகர். இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக a person "Non Grata அவரை அறிவிக்கவேண்டும் என சரத்வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்
தனது ட்வீட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கனடா உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு குருந்தூர் மலையில் இனமோதலை உருவாக்க முயன்ற தமிழ் அரசியல்வாதி ரவிகரன் மற்றும் தமிழ் பிரமுகர்களை சந்தித்துள்ளார் என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
2000 வருடத்திற்கு மேற்பட்ட பௌத்த ஆலயத்தை அவர்கள் அழிக்க முயன்றனர் அவர்களை இவர் சென்று சந்தித்துள்ளார் என சரத்வீரசேகர தனது ட்வி;ட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகரின் இந்த இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்ட மிகவும் அவமானகரமான செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சர்ச்சைக்குரிய செயல் என்பதால் கனடா தூதுவரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபர் என அறிவிக்கவேண்டும் என பரிந்துரை செய்வதாக சரத்வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.