மானிப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாய் பொலிசார் இன்று கைது செய்தனர். மானிப்பா...
மானிப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாய் பொலிசார் இன்று கைது செய்தனர்.
மானிப்பாய் நகர்பகுதியில் வீதிபோக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வேளை மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மில்றோய் உட்பட்ட போக்குவரத்து பொலிசார் பட்டாரக வாகனமொன்றை வழிமறித்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனத்தின் பின்புறமாக சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகளை சோதனையிட்ட பொழுது 4 கடலாமைகளை உயிருடன் கைப்பற்றினர்.
இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்து குறித்த நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இளவாலை கீரிமலை கடற்பரப்பில் சட்டவிரதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றபோதே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.