யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடாத்தி சேதம் ஏற்படுத்...
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடாத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் உள்ள திருச்சொரூபங்கள் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அதில் 2 இடங்களில் சொரூபங்களின் தலைகள் உட்பட சொரூபங்கள் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன , மேலும் இரண்டு இடங்களில் சொரூபங்கள் பகுதிகளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. மற்றைய இடங்களில் சொரூபங்கள் வைத்திருந்த கண்ணாடி கூடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.