பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்கு வருகை தரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
தென் பசுபிக் பிராந்தியத்திற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.