யாழ்.வலி,வடக்கு பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டுவந்த சித்தப்பா நேற்று வியாழக்கிழமை பலாலி பொலிஸ...
யாழ்.வலி,வடக்கு பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டுவந்த சித்தப்பா நேற்று வியாழக்கிழமை பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மேற்படி சிறுமியின் தந்தை கடல்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தந்தை இரவு கடல்தொழிலுக்கு செல்லும்வேளை குறித்த வீட்டுக்குச் செல்லும் தந்தையின் சகோதரனான சிறிய தந்தை சிறுமியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றபோது சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை உத்தியோதர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் விடயம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் சந்தேகநபரான சிறிய தந்தையை கைது செய்துள்ளனர்.