தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. இதனால் கூட்டுபோர் பயிற்சி, இராணுவ ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடும் வகையில் அ...
தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.
இதனால் கூட்டுபோர் பயிற்சி, இராணுவ ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடும் வகையில் அமெரிக்கா இராணுவ வீரர்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்படுவர்.
இந்தநிலையில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இரு நாடுகளையும் பிரிக்கும் சர்வதேச எல்லைக்கோட்டில் அமைந்துள்ள பன்மூஞ்சம் கிராமம் வழியே இவர் வடகொரியாவுக்கு சென்றுள்ளார்.
அவரை வடகொரிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவ வீரரை மீட்பது குறித்து அமெரிக்க இராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.