யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியில் மாணவிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலி...
யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியில் மாணவிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாக நீதவான் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பலாலி அன்ரனிபுரத்தில் கிறிஸ்தவ மத அமைப்பினரால் தனியார் கல்வி நிலையம் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதில் முகாமையாளராக கடமையாற்றிய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்ட காலமாக இரு மாணவிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டு வந்ததாகவும் தொடர்ச்சியாக அவரது செயற்பாடுகள் அதிகரித்த நிலையில் மாணவிகள் பெற்றோருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த சம்பவத்தை அறிந்து கொண்ட தனியார் கல்வி நிலைய நிர்வாகம் அதனை மறைப்பதற்கு பல முயற்சிகள் எடுத்த நிலையில் கொழும்பு சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் குறித்த நபரை கைது செய்தனர் .
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.