அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று(விய...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் பின்னர், வசந்த முதலிகே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.