தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானையை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப் போவதில்லையென தாய்லாந்து அரசாங...
தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானையை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப் போவதில்லையென தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா தற்போது தாய்லாந்து மன்னரின் பாதுகாப்பில் உள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு மீளவும் அனுப்பப்படமாட்டாது என அந்நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவித்துள்ளார்.