நல்லூர்வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த வே.முத்தையா அவர்களின் 100வது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லி அவர்க...
நல்லூர்வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த வே.முத்தையா அவர்களின் 100வது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லி அவர்களின் "விலையுயர்ந்த விதைகள்" எனும் கவிதைநூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நல்லூர்வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர் முனைவர் சி.சிவலிங்காராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நகழ்வில் வெளியீட்டு உரையினை ,
கவிஞர்.ரஜிதா அரிச்சந்திரன் அவர்களும்,
மதிப்பீட்டுரையினை கவிஞர்.வைவரவநாதன் வசீகரன் அவர்களும்,ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் திரு.சதா.கனகலிங்கம் அவர்கள் வாழ்த்துரையினை நிகழ்த்தவுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களும், சட்டத்தரணி சுதா கஜேந்திரகுமார் அவரகள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.